வரப்போகும் மழை

தூர்ந்த கிணறும்
புதர் மண்டிய வாய்க்காலும்
காய்ந்த வரப்பும்
கதிரில்லா வயலும்
காத்திருந்து கதறுதடா கல்நெஞ்சும் கரையுமடா
கொஞ்சம்
சீக்கிரமாய் வரச்சொல்லு கடவுளே
அந்த வரப்போகும் மழையை..
நிர்வாண மரங்களும்
குருவியில்லா கூடுகளும்
வறண்டு போன நதியோரம்
ஒடிந்திருந்த நாணல்களும்
வெம்மையிலே வெகுதடா பாழ் தரையில் வீழுதடா
கொஞ்சம்
சீக்கிரமாய் வரச்சொல்லு கடவுளே
அந்த வரப்போகும் மழையை...
விளைச்சலில்லா வேதனையில்
வீதி நிற்கும் தேரினையே
ஓட்டி மறந்தோமடா
ஒரு விழா இங்கு ஏதடா
கதிரருக்கும் நாள் வருமோ
கவலையெல்லாம் போய்விடுமோ
ஏங்கி நின்றோமடா நாங்கள் வாடி நின்றோமடா
கொஞ்சம்
சீக்கிரமாய் வரச்சொல்லு கடவுளே
அந்த வரப்போகும் மழையை...

எழுதியவர் : Rafiq (9-Sep-19, 3:34 pm)
Tanglish : varappokum mazhai
பார்வை : 82

மேலே