மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும் அதுவே
மண்ணும் இமயத்தின் உச்சியைத் தொட்டு
மீண்டுவர உன்னத பாதை உன்னெதிரே காட்டும்
ஒரு பெண்ணைப் பார்த்து மயங்குகிறாய் அவளிடம்
உன் உள்ளத்தை இழந்துவிட்டதாக எண்ணி
அவள் நினைவில் ஏங்கி ஏங்கி நாட்கள்கழிக்கின்றாய்
அவள் மீண்டும் உன் முன் காண நீ அவள் பின்னால்
அவளோ உன்னை கண்டுகொள்ளவில்லை நீயார்
என்று தெரியாததுபோல் உன் மீது ஓர் கடின
பார்வை தொடுக்க . நீயோ வாழ்க்கையே கசந்து
விடடதுபோல் நொந்து நொறுங்கி மூலையில்
முடங்கிக்கிடக்க…..
மனதில் உறுதி வேண்டும் , இந்த மாது
இல்லை என்றால் இன்னொருத்தி வருவாள்
என்னைக் காதலனாய் ஏற்பாள்….. என்று
மனதை திடப் படுத்திக்கொள்ள'
காதலிக்க காதல் பாதை உன்முன்னே தெரியும்
அதில் உன் காதலியும்……
மனதில் உறுதி வேண்டும்
சிகரங்களை எல்லாம் தொட்டுவிட
என் சந்திரனில் தனியாய் காலும் வைக்க.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Sep-19, 1:29 pm)
பார்வை : 33

மேலே