உன்னிடம் மயங்குகிறேன் பாகம் 6

உன்னிடம் மயங்குகிறேன் - பாகம் 6
6. எனக்குப் பிடிக்கல
ரங்கநாதனைத் தன்னுடைய வாட்ஸ் அப் காண்டாக்ட்லிருந்து சுந்தரி எடுத்து விட்டாள். இனிமேல் அவன் அவளிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள முடியாதபடி செய்து விட்டாள்.
அவன் அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றான். முடியவில்லை. அவனுக்கு அவளுடன் முன்பு அலைபேசியில் பேசியது நினைவுக்கு வந்தது. ”ஞாயிற்றுக் கிழமை உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளலாமா? நீங்கள் எப்போது ஃபிரியாக இருப்பீர்கள்” என்று கேட்டதிற்கு அவள், “நான் ஞாயிற்றுக் கிழமை எப்போதும் ஃபிரிதான். காலையில் மட்டும் கொஞ்சம் நேரங்கழித்து எழுந்திருப்பேன். நீங்க எப்போ வேணுமானாலும் காண்டக்ட் பண்ணலாம்.” என்றாள். அப்படிச் சொன்னவள் எப்போதுமே போனை எடுக்க மாட்டேன் என்கிறாள் என்று வருந்தினான்.
மறுநாள் எப்படியும் சுந்தரியிடம் பேசிட வேண்டும் என்று ரங்கநாதன் அலைபேசியில் முயற்சி செய்தான்.
மாடியில் ஒரு பைலை எடுக்கச் சென்ற சுந்தரி லைபேசி எண்ணைச் சரியாகப் பார்க்காமல் பேசத் தொடங்கினாள். ரங்கநாதனின் குரலைக் கேட்டதும் ”நான் நம்பரை சரியாக பார்க்கவில்லை. உங்க கிட்டேயிருந்துதான்னு போன் என்று எனக்குத் தெரியாது “.
”மூன்று நாட்களாக உங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ரொம்ப பிஸியா?” என்றான் ரங்கநாதன்.
”மாடிக்கு வந்தேன். அலைபேசியில் எண் சரியாகத்தெரியவில்லை.”
எண் சரியாகத் தெரிந்திருந்தால் எடுத்திருக்க மாட்டேன் என்பதை மறைமுகமாக சொல்கிறாள் என்பதை அந்த அப்பாவி உணரவில்லை.
”அன்று வாட்ஸ் அப்பிலிருந்து திடீரென்று சொல்லாம போய்விட்டீர்களே . நான் ரொம்ப நேரம் காத்திருந்தேன்” என்றான்.
”நீங்க வாட்ஸ் அப்பை விட்டு போய் விட்டிருப்பீங்கன்னு நினைச்சேன்” என்றாள்.
ரங்கநாதன் அலைபேசியில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றான். அவள் எடுக்கவில்லை. அவன் விடுவானா? இன்னொரு அலைபேசியிலிருந்து தொடர்பு கொண்டான். அவன் குரலைக் கேட்டதும் மெளனமே அவள் பதிலானது. குறும்செய்தி, மின்னஞ்சல், முகநூல் ஒன்றைக்கூட அவன் விடவில்லை. வெற்றி அவன் பக்கம் வராமல் அவனுக்கு எதிர் திசையிலேயே இருந்தது. என்ன செய்தும் அவளுடைய மெளனத்தைக் கலைக்க அவனால் முடியவில்லை.
நான் என்ன தவறு செய்துவிட்டேன். ஏன் சுந்தரி என்னை ஒதுக்கி விட்டாள். அவள் என்னை வெறுக்கிறாள் என்பது தெளிவாய் தெரிகிறது.
அடுத்த நாள் பொழுது விடிந்ததும் காலை ஏழு மணிக்கு ரங்கநாதன் அலைபேசியில் சுந்தரியுடன் தொடர்பு கொண்டான். அப்போது அவள் சமையலறையில் மும்முரமாகச் சமையல் செய்து கொண்டிருந்தாள். இவனிடமிருந்து போன் என்றதும் முதலில் கட் செய்து விட்டான். அவன் மறுபடியும் தொடர்பு கொண்டான்.
இவன் விடமாட்டான் போல் இருக்கிறது என்று நினைத்து க் கொண்டு போனை எடுத்து ஹலோ என்றாள்.
”சுந்தரி, ஏன் என் கிட்டே பேச மாட்டேங்குறே? “ என்று குழைந்தான்.
”எனக்குப் பிடிக்கல . ”
”நீ என்ன சொல்றே? சுந்தரி”
”இந்த மாதிரி நீங்க அடிக்கடி போன் செய்றது அதுவும் வீட்டுக்குப் போன் செய்யறது எனக்குத் துளிக்கூட பிடிக்கல என்றாள்.”
”சுந்தரி நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் . என் அன்பு பவித்திரமானது. நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். நீ என் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கிறாய் . தூய்மையான நம் நட்பை மிகவும் போற்றுகிறேன். என் நேசத்தை உனக்கு எப்படிப் புரிய வைக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை
” உளராதீங்க ...”
”.அவள் தன்னைக் காயப்படுத்தி விட்டதுபோல் அவன் உணர்ந்தான்.
“என்னை மன்னிக்கனும்” .என்று பணிவுடன் கேட்கிறேன். நான் என்ன தவறு செய்தேன் என்று சொன்னால் நான் என் தவறை திருத்திக் கொள்கிறேன்.”.
”நான் சொல்ல மாட்டேன்”.
”சுந்தரி, சுந்தரி , தயவு செய்து ... “ என்று கெஞ்சினான். என்னைப் ’பொறுக்கி’ என்று வேண்டுமானாலும் திட்டிவிடு. மெளனமாக இருந்து என்னைக் கொல்லாதே. “”
“ ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டீங்களா” நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனுசனுக்கு ஒரு சொல். புத்தி இருக்கறவங்க புரிஞ்சுப்பாங்க.
சுந்தரி நான் சொல்றதை கேள். உன் மேல் இருக்கிற அதீத அன்பால்தான் ..... போனை. துண்டித்து விடாதே என்றான்.
அவள் போனைத் துண்டித்து விட்டாள். அவன் மீண்டும் போன் செய்ய முயற்சி செய்தான். சுந்தரி போனை எடுக்கவில்லை. அன்றே அவள் புதிய போனை வாங்கி தன்னுடைய மொபைல் நம்பரை மாற்றி விட்டாள். அது ரங்கநாதனுக்குத் தெரியாமல் அவளைப் போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான்.

எழுதியவர் : Shivani (10-Sep-19, 3:32 pm)
சேர்த்தது : shivani
பார்வை : 53

மேலே