இயற்கை

தெருவோர அந்த பருத்த வேப்பமரக்
கிளைகளில் அங்கும் இங்கும் சில
பறவை கூடுகள் அதில் ஒன்று
இந்த காகத்தின் கூடு , கூட்டில் சில
முட்டைகள் , அடைகாத்துவந்தது காக்கை
இதோ தெரிகிறது என் கண்களுக்கு
முட்டையெல்லாம் காக்கைக்கு குஞ்சாகி
கூட்டில் ஒரு காகத்தின் குடும்பம் …..
அங்கும் இங்கும் பறந்துபோய் இரைதேடி
பொறுப்புள்ள தாயாய் குஞ்சுகளுக்கு
நேரம் தவறாது ஊட்டும் காகம்...….
இன்று அந்த மரத்தின் கீழ் ஒரு
சிறு காகங்களின் கூட்டம் 'கா கா என்று
இறைந்து கொண்டும் அந்த வழியாய்
யாரையும் போக விடாது இருப்பதும் கண்டேன்
கிட்டே சென்று பார்த்தபோது புரிந்தது
ஒரு காகத்தின் குஞ்சு தனியாய் பறக்க
எண்ணி கீழே விழுந்து இறக்கையில் சேதம்
பறக்க mudiyavillai…...தாய் காகம் மற்றும்
உற்றார் உறவினர் காகங்கள் ஒன்று கூடி
ஆலோசனையில்…… தெருவில்… எப்படி
அடிபட்ட குஞ்சை மீட்பதில்…..முடிவில்
இறுகாக்கைகள் முயன்று தங்கள் தோளில்
தாங்கி கீழே கிடந்த குஞ்சை தூக்கி
பறந்து வந்து மரக்கிளை கூட்டில்
விட்டுச் செல்ல…… காக்கை கூட்டம் கலைந்தது
அமைதியாக…..




மற்றோர் நாள் என் வீட்டு சமயற்கட்டில்
ஜன்னலுக்குப் பின் இலவ மரம் அதில்
வசிக்கும் இரண்டு காக்கைகள் ….
தினமும் காலை 6 மணிக்கு , மதியம் 1 மணிக்கு
தவறாது சமையல் கட்டு ஜன்னலை அலகால்
கொத்தி, கா கா என்று கரையும்
'உண்ண உணவு தா' என்று கேட்பதுபோல்
ஜன்னல் மூடி இருந்தால் அலகால்
அடித்து பலமாய் கரையும் காகம்
நான் தந்த உணவை பெற்றுக்கொண்டபின்
சிறிது நேரம் காணாமல் போய்விடும்

இப்படியே எங்கள் கிச்சனை ஒரு
'மெஸ்ஸா. நினைத்து வசிக்கிறது
இந்த காகம் ingu …. போ என்றால்
'கா' என்று குரல் தந்து போகும்
உணவு தந்து வா என்றழைத்தால்
வேகமாவே வந்து சாப்பிடும் காகம்


சிறிய இந்த காகத்தின் தலையில்
எத்தனைக் கூறிய அறிவு!
வியக்க வைக்கிறது ….. யார் தந்தார்
இதற்க்கு இந்த அறிவு! மனித அறிவுபோல்
சிந்தித்து செயல்படும் அறிவு!


இயற்கையே வியக்கிறேன் இதை
எல்லாம் காட்சிப்பொருளாக எமக்கு
வைத்தாய் ….

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Sep-19, 4:36 pm)
Tanglish : iyarkai
பார்வை : 378

மேலே