ஒரு நாள் கனவு

ஒரு நாள்
உலகம் குறுகியே
சிறியதானது….
இயற்கை அழகினில்
இமைகள் மயங்கியே
வலிமையானது….
சாதிகள் ஒன்றில்லா
சமத்துவ சமுதாயம்
உருவானது…..
சலங்கைகள் கட்டி ஆண்ட
அரசியல் ஆட்சிகள்
முடிவானது….
ஆன்ட்ராய்டு போனுகள்
அலுப்பைத் தந்தே
அழிந்து போனது….
அன்போடு சேர்ந்து பேச
அன்று முதல் நேரங்கள்
அதிகமானது…
ஊழலும் லஞ்சமும்

ஓடி ஒழிந்த தடமின்றி
மறைந்து போனது….
நேர்மையும் கருணையும்
ஒவ்வொரு மனதிலும்
குடி புகுந்தது….
பாலியல் தொல்லையில்
பயந்து வாழ்ந்த நாட்களெல்லாம்
தொலைந்து போனது….
பாசமும் நேசமும்
பன்மடங்குப் பெருகிப் போய்
பாதுகாப்பாய் காத்து நின்றது….
விவசாய விளைநிலங்கள்
பசுமை தந்தே பிரசவித்தது…
விவசாயி மனநிலையோ
மீண்டும் பெற்ற சுதந்திரமாய்
வெளிச்சம் கண்டது….
மக்களின் தேவையோ
மக்கள் அறியும் முன்னே
சேவை செய்யப்பட்டது….
மனிதரைப் பிடித்த நோய்
மாற்றம் கண்டு மடிந்து போக
உணவே மருந்தாகி
உயிருக்கு உயிர் கொடுத்தது….
அடடா!
இருபதாம் நூற்றாண்டில்
இந்தியாவின் வல்லரசு
உதயமானதோ-என
எண்ணிப் பார்த்து வியக்கும்பொழுது
மணியோசை அடித்ததிலே
மனதுறக்கம் கலைந்ததன்று….
விழித்தபோதே விளக்கம் கொண்டேன்
அது வெரும் ஒருநாள்
கனவென்று…..

வரிகள்,
மாங்கனி சந்தோஷ்

எழுதியவர் : மாங்கனி சந்தோஷ் (10-Sep-19, 9:21 pm)
சேர்த்தது : Mangani santosh
Tanglish : oru naal kanavu
பார்வை : 170

மேலே