அவன் என்மீது கொண்ட காதல்

' ஜென்மம் என்று ஒன்றிருந்தால் அன்பே
நானும் நீயும் காதலராய் பிறந்திட வேண்டும்
மனிதராய், மிருகமாய், இல்லை ஈ எறும்பாய்
இத்தனையேன் ஜடப்பொருளாய் பிறந்திடினும் '
என்றான் என்னவன் இதைவிட வேறோர்
நம்பிக்கையும் அவனிடம் நான் ஜென்மம் முழுவதும்
வேண்டேன் என்று என் மனதிற்குள் நினைத்தேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Sep-19, 9:46 pm)
பார்வை : 155

மேலே