அவளை காண சென்றேன்

பாதையில் பூத்த பொன்னிற மலரில்
அரும்பிய மீசையாய் அவளின் பார்வை
சற்றே புன்னகைத்து அழைத்தால் இனிதாய்
மழை சாரலில் சென்ற என் பயணத்தின் முதற்படி !

விண்ணில் ஒளிரும் மதியை நோக்கி
ஞாயிறு துண்டுகள் காதல் அம்புகள் எய்ய
நானும் ரசித்தேன் அதனில் ஒன்றாய்
இரவாய் நானும் அதில் உயிராய் நிலவும்
கழித்தோம் இனிதாய் அன்று

அவளின் மொழியோ சல சல
அது தான் எங்கள் உணர்வின் மொழி
அணைத்தேன் இருக்க அவளினுள் மூழ்க
அவளோ சென்றால் மீண்டும் வருவேன் என்று
என் காதலும் பாய்ந்தது அவளின் அழகை போல

எத்தனை அழகிகள் என்னையும் சூழ
வடித்தேன் ஆயிரம் மடல்கள் ஆளுக்கொன்றாய்
மனதில் ஏந்திய என் சோகம்
மறைந்தன அவளின் முத்தத்தால்
எத்தனை கண்ணீர் அவளை பிரிய
ஒருநாள் வாழ்வோம் அவளும் நானும்

எழுதியவர் : கவின்குமார் (11-Sep-19, 8:34 am)
பார்வை : 141

மேலே