டீ

உன்னை
மறக்க நினைத்து அருந்தும்
ஒவ்வொரு டீயும் சொல்கிறது
முட்டாளே
நீ அருந்தும் டீயே
அவனின் விருப்பமாயிற்றே
பிறகெப்படி மறப்பது
அவனை, நீ
முதலில் மறந்திடு
டீ குடிக்க

நீ ஏந்தும் கோப்பையில்
எனை நானே ஊற்றுவேன்
நீ எனை பருகிடும் வேலையில்
உன்னுள்ளே கரைந்தும் போவேன் ❤❤

எழுதியவர் : தீப்சந்தினி (11-Sep-19, 11:28 am)
சேர்த்தது : தீப்சந்தினி
Tanglish : dii
பார்வை : 57

மேலே