காதல் சேட்டை

வான்மகளின் காதல் சேட்டை
பனித்துளியில் நானிலம் நனைய...
பின்னிரவில்
உன் வரவிற்காய் அலையோரம் நான்..!

சடுதியில் கரமொன்று தோள்பற்ற
நரம்பினில் சில்லென்று குளிர்பரவ
சிலையான என்முன்னே
பார்காணா பேரழகியே நீ...

மருளும் மான்விழியால் என்னாச்சு
நீ வினவ...
உருகும் பனிச்சிலை ஒன்று
உயிர்வரை நனைக்க
நான் கற்சிலையாவதில் விந்தையென்ன கண்ணே
மறுமொழி கூற...

நாணத்தால் மங்கை உன் பாதவிரல்கள்
நிலமதில் காதல் சுவரங்கள் மீட்ட..
உயிர்பெற்ற உடலோ உனை லேசாய் அணைக்க
பளிங்கு முகத்தில் கோபரேகை படர..
சினத்தால் சிவந்த இதழை
கோபம் தீர சுவைக்கவா இன்பம் கூட
காதோரம் நான் கிசுகிசுக்க...

சீ.. என தள்ளிவிட்டு நீ ஓட
கொடியிடையோடு பிடி இருக
மன்னவன் கைப்படா ஏக்கம்தான்
மெலியும் இடையின் இரகசியமோ
நான் வினவ...

பொருக்கி...என
சிணுங்கல் அடியொன்று தந்து
மார்போடு நீ சரிய...
பெண்மையா பேரின்ப பெட்டகமா
மங்கையா மலரணையா..
வர்ணிக்க வார்த்தைகளின்றி
மையலில் நான் கிறங்க...

ரசித்தபடி...
காதல் சேட்டை நீ துவங்க
வெட்கப்பட்ட வான்மகளும்
மறைந்தே சென்றாள்..!

எழுதியவர் : (11-Sep-19, 11:54 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : kaadhal settai
பார்வை : 186

மேலே