மாலை பொழுது

மங்கிய சூரியன் மாலையில் தோன்ற

மங்காத ஒளிகள் வீதியெங்கும் பரவ
பறவைகள் கூடு திரும்ப
விழித்தெழுமே ஓர் அழகிய மாலை பொழுது !

சிந்திய சாரல் களிப்பாக்க
சிதறிய கதிர்கள் பொன்னிறமாக்க
உன் அழகால் நான் மூழ்க
உயிர்தெழுமே ஓர் அழகிய மாலை பொழுது!

ஓடிய கால்கள் உனதாக்க
ஓய்ந்த என் மனது இலக்காக்க
வாடிய விழியை துடிப்பாக்க
வெடித்ததெழுமே ஓர் அழகிய மாலை பொழுது!

வீதியும் உன்னால் நிறைந்தது
உந்தன் வரவால் என் பருவம் கழிந்தது
தென்றலும் தேடும் உன்னை
தெரிந்தும் மறைத்தேன் உனை ரசிக்க!

எழுதியவர் : கவின்குமார் (11-Sep-19, 1:51 pm)
Tanglish : maalai pozhuthu
பார்வை : 196

மேலே