கனவு ஆசிரியர் விருது

ஏய்யா ராமலிங்கம், 'கனவு ஆசிரியர்' விருது வாங்கின கையோட இந்தப் மாற்றல் ஆகி வந்திருக்கிற. அந்த விருது வாங்கறதுக்கு என்னய்யா செயயணும்? நான் பணிஓய்வு பெற இன்னும் இரண்டு வருசம்தான் இருக்குது. அதுக்குள்ள நான் விருதை வாங்கியாகணும். அதுக்கு என்ன வழின்னு சொல்லுய்யா.
@@@@@@
தமிழய்யா, இரவு நேரத்தில தூங்காம அடுத்தநாள் நடத்தவேண்டிய பாடங்களுக்கு வேண்டிய குறிப்புகளை எடுக்கணும். எப்படி நடிச்சு, பாடி, ஆடி பையன்களுக்குப் புரிய வைக்கிறதுன்னு பயிற்சி எடுக்கணும்.
@@@@@
அப்பறம்.
@@@@@@@
தூக்கக் கலக்கத்தோட வகுப்புக்குப் போற நீங்க பகல் கனவு கண்டுட்டே பாடங்களை ஆடி, பாடி, நடிச்சு பாடத்தை நடத்துணும். நீங்க தூக்க கலக்கத்தில தள்ளாடிட்டு வகுப்பில பாடம் நடத்தற விசயம் மாணவர்கள் மூலமா தலைமை ஆசிரியருக்குத் தெரியணும். அவரும் ரகசியமா உங்கள நோட்டம் போடுவாரு. உங்களப் பத்தி கல்வித்துறைக்கு மாதம் ஒருமுறை தகவல் அனுப்புவாரு. அவுரு தர்ற சான்றிதழ் கல்வித்துறைக்கு சரின்னு தெரிஞ்சுதுனா அடுத்த வருசம் ஆசிரியர் தினத்தன்று உங்களுக்கு 'கனவு ஆசிரியர்' விருது.
@@@@@@
உம். என்னால வகுப்பிலத் தூங்கத்தான் முடியும். தூக்க கலக்கத்தில கனவு கண்டுட்டு நடிச்சிட்டு பாடிட்டு ஆடிட்டெல்லாம் பாடம் நீங்கள் நடத்த முடியாது ராமலிங்கம். எந் தலையெழுத்து எந்த விருதும வாங்க நாப்பதாண்டு பணிக்கு அப்பறம் 2021ல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறப்போறேன். வகுப்பில தூங்கி தூங்கியே கெட்டபேரு வாங்கிட்டேன். அதனால தலைமை ஆசிரியர் பதவியும் எனக்கு நழுவிப் போச்சு. போ..... எல்லாம் போச்சு.

எழுதியவர் : மலர் (11-Sep-19, 1:53 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 92

மேலே