அன்பே

கடல் அலைபோல் எனுள் விழுந்தால்
எவ்விதம் உனை தாங்குவேன்
சிறுதுளியாய் நிறைந்து விட்டால்
மடியினில்தான் ஏந்துவேன்.
வெப்பம் குறைந்த இரு சூரியன் உன்
விழிகள் வழி கண்டேனடி
தினம் இரவில் என் நிலவில்
உனை குடி வைத்தேனடி ..
இருப்பது ஒரு வாழ்க்கை அதை
உனக்கென தருவதில் சுகம்சுகமே
இறப்பென வந்தாலும் உன் மடிமீது
தலைசாய்த்து வீழ்வேனே...

எழுதியவர் : M.Rafiq (11-Sep-19, 2:54 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : annpae
பார்வை : 107

மேலே