தலையணை

ஓட்டல் அறை தலையணை
உறை மட்டும் மாற்றப்படுகிறது
கறைபடிந்த உறையோடு சில
கறைபடிந்த கதைகளும் மறைய
உறைக்குள்ளிருந்த தலையணை
மௌனமாய் இன்னும் பேசாமல் இருக்கிறது
தலையணை பேசினால்
அதன்மேல் தலைவைத்து படுப்போர்க்கு
கதைகள் சொல்லலாம் தூங்கவைக்க
இல்லை அறையை விட்டு வெளியேற்ற!
விக்ரமாதித்தன் சிம்மாசன படிகள் போல் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Sep-19, 3:08 pm)
Tanglish : thalaiyanai
பார்வை : 55

மேலே