உறவுக் கோலங்கள்

உதட்டில் மின்மினியாம்
உள்ளத்தில் நச்சுப் புகையாம்...

வார்த்தைகளில் பரிவாம்
செயல்களில் சாக்கடையாம்...

ஆபத்திற்கு அரை நடிப்பாம்
துயரத்திற்கு முழு நடிப்பாம்....

வீட்டுக்குள் பரிகாசப் பட்டிமன்றமாம்
வீதிக்கு விமர்சனம் பொழுதுபோக்காம்...

உறவுக்கு அந்தஸ்து குறியீடாம்
உதவிக்கு சாதி இலட்சினையாம்...

அன்பிற்கு பஞ்சம் விற்பனையாம்
பணத்திற்கு உறவு மலிவாம்...

(விதிவிலக்கில் தேங்கி நிற்கும்
உறவும் உண்டு) (இஷான்)

எழுதியவர் : இஷான் (11-Sep-19, 7:07 pm)
சேர்த்தது : இஷான்
Tanglish : Uravuk kolangal
பார்வை : 118

மேலே