இந்தியாவில் நிகழும் பிரச்சனைகளும்,அதற்கான தீர்வுகளும்

என்னை ஈன்றெடுத்திட்ட பெற்றோருக்கும்.... என் நாவினில் தவழ்ந்தாடும் முத்தமிழுக்கும் முதல் வணக்கம்!! இவ்வவையினில் நிறைத்திருக்கும் ஆன்றோர்களுக்கும்,சன்றோர்களுக்கும் மற்றும் என்னைப் போன்றோர்களுக்கும் இரண்டாம் வணக்கம்!!! உலகமே விண்ணுலத்தை வியந்துபார்த்த விந்தையை நிகழ்த்திய "சந்திராயன்-2" நிகழ்வை தரணியினில் அறங்கேற்றிய நம் தாயகமாம் "இந்தியாவினில் இமயம் முதல் குமரி வரை நிகழும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் குறித்த தலைப்பிற்கான தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்..அறிவியல் வளர்ச்சியால் பல அற்புதங்களை நிகழ்த்தி கொண்டிருக்கும் நம் நாட்டில் இன்னும் அறியாமை என்னும் இருள் சூழ்ந்து பெண்மையை அலங்கோலப்படுத்தும் நிகழ்வுகள் தினம் தினம் அறங்கேறிய வண்ணமே உள்ளது.புனிதம் காக்கவேண்டிய கோவில்களில் புதுமை படைக்கும் நிகழ்வுகளாக பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது.சுதந்திர இந்தியாவினில் இன்னும் பெண்களுக்கு தனிச்சுதந்திரம் வழங்கப்படவில்லை.வீட்டினிலும்,நம் நாட்டினிலும் இன்னும் அடிமை விலங்கை உடைத்தெறிய முடியாமல் கலங்கிய கண்ணோடு காணொளியின் நடுவே கலங்கரையின் சிம்மினி வெளிச்சத்தில் பெண்ணியம் பேசும் தமயேந்தியாய் தலைவிரி கோலத்தில் ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கும் பெண்மயாய் நிற்கும் "கண்ணகி" யை பார்த்தும் மனம் மாறாமல் இன்னும் பல ஆண்கள்!!நகரமயமாக்கலாலும்,தொழிற்சாலை பெருக்கத்தாலும் புனித வனமான நம் நாடு...தற்போது புகை சூழ்ந்த நரகமாக மாறி சுவாச சம்பந்தமான பல்வேறு நோய்களின் பிறப்பிடமாக மாறத் தொடங்கியுள்ளது.கல்வி வளர்ச்சியில் இந்தியருக்கு நிகர் இந்தியரே!! என்று பெருமிதம் நமக்குள்ளே இருப்பினும் கற்றோருக்கு ஏற்ற கனிந்த பணி இல்லாமல் வேலையில்லா திண்டாட்டம் வீடுகள் தோறும் தலைவிரித்தாடுகிறது..மகத்துவமான மருத்துவ துறையினால் மாண்டிட்ட ஒருவரை மறுபிறவியை தழுவும் நிகழ்வையே உருவாக்கிடும் அளவிற்கு சரித்திரம் கண்டிருந்தாலும் கடைக்கொடியினில் காய்ச்சலிற்கே உயிரை இழந்திடும் ஏழ்மையும்,வறுமையும் நிறைந்த குடும்பங்களும் காலத்தை வெகுவாக கடந்துக் கொண்டிருக்கும் ஏற்றதாழ்வு நிறைந்த நாடாக நமது இந்தியா விளங்குகிறது என்றால் அதில் எவ்வித ஐயப்படுமில்லை.வாகனப்பெருக்கம் இன்றளாவிய விவசாயத்தை அழிக்கும் நாகரிக தொட்டிலாகவே விளங்குகிறது.விவசாய காடுகள்யாவும் நவீன சாலைகளின் தொடக்கமாக மாறி இன்று வேகத்தினால் விவேகத்தை இழந்து பல உயிரை குடிக்கும் சுடுக்காடுகளாய் மாறி வருகிறது."நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவனின் வாய்மொழி இன்று வறட்சியின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் பொய்மொழியாகவே மாறியுள்ளது.தாகத்திற்கு சேற்றை வடிகட்டி பருகும் அவலநிலை என்று மாறும் என்ற ஏக்கமும், அடுத்த தலைமுறையின் வாழ்க்கைநிலையை எண்ணி கவலை கொள்ளும் நிலையும் ஒவ்வொரு குடிமக்களின் நெஞ்சத்திலும் நிலைத்து நிற்கிறது.தவிக்கும் மக்களுக்கு தாகம் தீர்க்கும் இளம்தளிர் விடும் துளிர் மழையைப்போல் கவலையும்,ஏக்கமும் நிறைந்த எம் உடன் பிறப்புகளின் கவலையைப்போக்க பூப்போன்ற எம் குழலின் மென்மையாக வருடும் வார்த்தைகளில் சிதைந்து கொண்டிருக்கும் சிக்கல்களை நீக்கி,இமயம் தலைக்க எம் யோசனை..... பெண்மையை நேசிக்க தவறும் ஆண் மகனார்களுக்கு அரேபிய நாடுகளின் கடும் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.வளியை முட்டும் புகைப்போக்கி இல்லா தொழிற்சாலைகளை சிதைமூட்டி போகிக்கு இறையாக்கிட வேண்டும்.அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்கும் அரசு,அவர்களின் வாழ்க்கையை செழிக்க வேலையையும் வழங்கி ஆதரவு கரம் நீட்ட வேண்டும்.ஏழ்மையின் பிணியை நீக்கிட அனைவருக்கும் எளிய முறையில் மருத்துவம் கிடைத்திட தனியார்வசம் உள்ள மருத்துவத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.விவசாயத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் சாலைகள் உருவாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.அனைத்து நதிகளையும் இணைத்து இந்தியர்களின் வறட்சியை போக்க முயற்சிக்க வேண்டும்.இந்தியாவில் பிரச்சனைகளோ பல!! அதில் நான் பகிர்ந்து கொண்டதோ சில!! வழிய தீர்ப்போம்!! வாழிய இந்தியாவை ஒற்றுமையோடு வடிவமைப்போம்!!! இரா.வசந்தகுமார், பட்டதாரி ஆசிரியர், அமேநிப, மெணசி - 636904.....

எழுதியவர் : இரா.வசந்தகுமார் (11-Sep-19, 9:32 pm)
சேர்த்தது : விஸ்வமோனீஷ்
பார்வை : 257

மேலே