ஔவையார் Vs ஒட்டக்கூத்தன்

ஔவையார். Vs ஒட்டக்கூத்தன்

ஓர்நாள் அரசவீதி யில்தமிழ் ஔவையும்
ஓர்வீட்டில் கால்நீட்டி உட்கார்ந்த --ஔவை
மடக்கினாளோர் காலைத் தடவேந்து கண்டு
மடித்தாள் புகழேந்தி கண்டு

இன்னொரு காலை மடக்கினாள் தன்மையாய்
பின்ஒட்டக் கூத்தன் வரவுகண்டு --- முன்போல
இரண்டுகாலை நீட்ட அரண்டஓட்டக் கூத்தன்
மிரண்டுகேட்டான் ஔவையிடம் ஏன்

உத்திரமாய் வேந்துவென ஒர்கால் மடக்கினாளாம
அத்தனையும் கற்ற புகழேந்தி --- சத்தியவான்
ஆயின் மடக்கினாளாம் மற்றவோர்கால் ஆயினும்பின்
போயினானன் கூத்தன் அவன்

கூத்தன் அரைகுடம் அத்தனைக்கில் லைத்தக்கான்
சொத்தையென நீட்டினாளாம் சோடிக்கால் --- அத்த்னை

மனம்பதைக்க. கூத்தன் எனக்கில்லை ஞானம்
எனின்சோதி யும்என்றா னாம்

பாட்டியுடன் கேட்டாள் மதிமூன்று ஈர்றடிப்
பாட்டில் வருமோ எனக்கேட்டு ---- பா டெ ன்றாள்
கூத்தனுடன் செய்து முடித்தானாம் ஆத்திரமாய்
சாத்தியமாய் ஒர்மதி இல்லை

" வெள்ளத் தடங்காச் சினவாளை வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முல்லைக் கிழித்து மழை த் துளியோ டிறங்குஞ் சோணாடா
கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா வண்டர் கோபாலா
பிள்ளை மதிகண் ட ப்பேதை பெரிய மதியு மிழந்தாலே " (ஒட்டக்கூத்தர்)




" பங்கப் பழனத் துழுதுழவர் பலவின் கனியைப் பறித்தென்று
சங்கிட் டெறியக் குரங்கிளநீர் தனைக்கொண் டெறியுந் தமிழ்நாடா
கொங்காக் கமரா பதியளித்த கோவே ராசகுல திலகா
வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்த பிறைக்கும் விழியாளே. "

(புகழேந்தியின் சரியான பாடல்)
ஒருசமயம் ஔவையார் ராஜா வீதியில் ஒருவிட்டின் முற்றத்தில் காலை நீட்டி
உட் சமயம் அரசன் பெரியவர் களுடன் உலா சென்றானாம். அரசனைப் பார்த்ததும் பாட்டி
தனது ஒருகாலை இழுத்து மடக்கிக் கொள்ள. கொஞ்சநேரம் கழித்து புலவர்
புகழேந்தி வரவும் பாட்டி மற்றொரு காலையும் மடக்கிக் கொண்டாளாம். இதைப்பார்த்த
வாரே வந்த ஒட்டக்கூத்தன் . அவர் வரும்போது ஔவையார் தனது இரண்டு காலையும்
திடீரென நீட்டினாளாம்.
ஒட்டக்கூத்தன் ஔவைத் தன்னை அவமானப் படுத்துகிறார் என நினைத்து ஏய் கிழவி
அரசர் வரும்போது ஒருகாலையும் புகழேந்தி வரும்போது இரு காலையும் மடக்கி மரியாதை
கொடுத்தநீ நான்வரும்போது அவமானமாய் இரண்டுகாலையும் நீட்டியதேன் எனக்
விளக்கம் கேட்டான்.
அதற்கு ஔவைப்பாட்டி தேசத்தை யாளும் மன்னன் வரவே அவர்க்கு மரியாதை நிமித்தம்
எனது ஒரு காலை மடக்கினேன். அதன் பிறகு புலமையில் அத்தனையும் நன்கு
தேர்ச்சி பெற்ற வித்துவான் புகழேந்தி வரவும் அவருக்கு மரியாதை தரவெண்டி
எனது மற்றொரு காலையும் மடக்கியது மரியாதை நிமித்தம் என்றாள். அதன் பிறகு
அவ்வளவாக புலமையில்லாது படித்தவன்போல காட்டிக்கொள்ளும் நீ வரவும்
இரண்டு காலையும் நீட்டினேன் என்றாள். அது கேட்ட கூத்தன் என் புலமையை வேண்டுமானால்
சோதித்து பின் நான் எப்படி என்பதைத் தெரிந்து கொள் என்றார்.

உடனே ஔ வையார் ஒரு பாடலின் ஈர்றடியில் சந்திரன் அல்லது அதன் அர்த்தம் மாறாது
வேறு பெயரில் மதியை மூன்று முறை வரும்படி பாடும் பார்க்கலாம் என்றார்..கூத்தன்
அவ் வாறு பாட் அதில் இரண்டுமுறை த்தான் ஈற்றடியில் சந்திரன் வருவதைக் கண்ட ஔ வையார்
". ஒட்டா ஒரு மதி கெட்டாய் " என்று சிலேடையாய் அவனின் மந்த புத்தியை நிரூபணம்
செய்தார்.

பின் புகழேந்தி யை வரவழைத்து அதேபோல் பாடக்கடவீர் என்றாள். உடனே புகழேந்தி
அவர்பாடலைப் பாடி அதில் மூன்று முறை பிறை என்ற சந்திரனின் பொருள் பட
லாவாகமாக இயற்றினார். ஒட்டக்கூ த்தனின் கர்வத்தை அடக்கி அதேசமயம் புகழேந்தி
யின் பெருமையை ஔவையார் இப்படி வெளிக்கொணர்ந்து பாராட்டினாராம்.

(தரம் பிரித்துக்கண்டு சொன்ன ஔவை வாழ்க)

.

எழுதியவர் : பழனிராஜன் (12-Sep-19, 1:16 pm)
பார்வை : 397

மேலே