காதலியே வா

காதலியே வா

கால் கடுக்க நிற்கிறேன்
என் காதலி இன்னும் வரவில்லை.

சின்ன இடையாள் சிவந்த முகத்தாள்
செவ்விதழ் உடையாள்
என் காதல் இளவரசி
ஏன் இன்னும் வரவில்லை.

வண்ண ஓவியம்
பேசும் அழகிய சிலை
காவிய நாயகி
என் இதய ராணி
ஏன் இன்னும் வரவில்லை

காதல் பைங்கிளி
அதிசய பொக்கிஷம்
இன்ப சுரங்கம்
என் காதல் மகாராணி
ஏன் இன்னும் வரவில்லை.

சந்தன மனம்
சாந்த குணம்
அமைதி பேச்சு
என் தெய்வாம்சம் நிறைந்தள்
ஏன் இன்னும் வரவில்லை

இன்ப ஊற்று
கொட்டும் அருவி
தேன் கூடு
என் இதயக்கனி
ஏன் இன்னும் வரவில்லை.

விரைவில் வா
உன்னை பார்க்க அவா
என் கொஞ்சம் புறா
பறந்து வா
என்னை காண வா
சீக்கிரமாக வா
காதலிப்போம் வா.


- பாலு.

எழுதியவர் : பாலு (12-Sep-19, 3:17 pm)
சேர்த்தது : balu
பார்வை : 61

மேலே