தீ

தீ, தித்திக்கும் தீ
தீ தித்தது எப்போது
அத்தீ அடுப்பில் அடங்கி
எரிந்து அதன்மேல் வைத்த
பாத்திரத்தில் காய்ந்த பாலை
வாய்க்கு சுவையான இனிப்பாய்
மாற்றியதே அப்போது

கண்ணுக்கும் புலனாகா
ஒரு சிறு தீப்பொறி
அந்த அகண்ட கானகத்தின்
உலர்ந்த இல்லை சருகைதாக்க
கானகமே தீப்பற்றி எரிந்து
சாம்பலானது , கூட இருந்த
விலங்கினங்கள் அத்தனையும் ;

வேத விற்பண்ணர் வளர்க்கும்
வேள்வித்தீ , ஆகுதி சேர்க்க சேர்க்க
விண்ணளாவி புகையாய்ப் போகும் தீ
மழை வேண்டி வளர்த்த தீ
தன்னையே அர்ப்பணித்து
மக்களின் தாகம் தீர்க்க மாரியானதே !
விண்ணின் மாசையும் போக்கி
நலந்தரும் காற்றும் தந்து

தீ, தீ அவன் வாயால் உதிர்த்த
அவச்சொற்கள் அவனையும் அழித்து
அவன் சுற்றத்தையும்
சுட்டுவிடும் வார்த்தைகள்

தீ தீ குளிரானது
வெய்யோன் ஒளிக்கதிர்கள்
சந்திரனில் பட்டு மாறியதே
இரவில் சந்திரன் தரும்
தன்னொளியில்

தீ தீயதே தீயோர் சேர்க்கை விழுத்துக்கொள்ளாவிடில் உன்னை அணைத்து சுட்டுவிடும்
வாழ்வை குலைத்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Sep-19, 4:22 pm)
Tanglish : thee
பார்வை : 110

மேலே