வல்லமையான வனப்புகள்

இயலாத ஒரு மனிதன்
இவ்வுலகில் பிறந்துள்ளானா?
இயலாமல் எவ்வுயிரையும்
இறைவன் இங்குப் படைப்பதில்லை.

எறும்புக்கும் எருதுக்கும்
எதெது தேவையோ
எல்லாம் இவ்வுலகில்
எளிதாகவே கிடைத்திட்டவே

ஏகன் அநேகன்
எம்பெருமான் படைத்துள்ளான்
எல்லாவற்றையும் பதுக்கிவிட்டால்
எப்போதும் தீர்வு இல்லை

உடுக்கையும் உணவும்
உறங்க ஒரு வீடு மட்டும்
உள்ளபடி போதுமென்றால்
உலகினோருக்கு எல்லாமே கிடைத்திடுமே

கல்வியைக் கற்றமாந்தர்
கறையின்றி வாழ்ந்துவிட்டால்
கடும் பஞ்சம் தோன்றாமல்
களிப்பு நம்மைப் பற்றிக் கொள்ளும்

நெறி அறிந்த மானிடரெல்லாம்
நெறியோடு செயல்பட்டால்
நேர்மையினாலேயே இவ்வுலகம்
நெடு நாட்கள் சுழன்று மகிழும்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Sep-19, 6:56 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 22

மேலே