சத்தியம் செய்வீர்களாக

என் மனதில் தப்பான எண்ணம் இருந்தது இல்லை என்று சொல்லி நான் ஏமாற்றப் போவதில்லை. அதற்கான தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் ஆச்சர்யமில்லை.
நீயும் நான் ஒரு சக்தியின் பிள்ளை.
நர்த்தனம் மாடும் உன் நாக்கில் எலும்பில்லை.
தண்டனைக்குப் பயந்தவன் செய்கிறான் தற்கொலை.
நான் அவ்வளவு பலவீனமானவன் இல்லை.

கூடியிருந்தபோது சிரித்தாய்; கூறுகெட்ட உலகில் எதும் நிரந்தரமில்லை.
கல்லூரி சென்றாலும் நாட்டுக்கே அரசனாலும் தன் பயத்தை வெல்லாதவன் பலவீனமானவன்.

சீவன் வசிக்க உடல் போதும்,
உலகில் சாதிக்க பொறுமையும், தன்னாளுமையும், தைரியமும் சேர்ந்திருக்க வேண்டும்.
தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டால் கோழைப்பயலென தூக்கி எறிந்து எரித்துவிட்டு உலகம் மறந்திடும் இப்படியொருவன் வாழ்ந்தான் என்பதையே.

கோயில் கோயிலாகச் சுற்றினாலும் தன் உடலென்ற கொயிலில் சித்தமென்னும் சிவத்தை வளர்த்து வணங்காவிடில் எந்த உயிரும் மிகப் பலவீனமானதே.
உயிர் பயத்தால் கொடிய பாவத்தையும் செய்யத்துணியுமே,
ஆதலால் அன்புடையீர் எந்த சூழல் நிலையிலும் தற்கொலை செய்ய மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து தருவீர்களாக.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Sep-19, 9:15 am)
பார்வை : 614

மேலே