கனவு

கனவுகள் சுமந்த
காலங்களின் கதிர்வீச்சு
களமாடிச்செல்கிறது
கார்முகில்போல்!
கசிந்துவிடாது
கவ்விப்பிடித்திருக்கிறேன்
கருடமேனி கண்களில்
காவியமாகாது
கலைந்துபோகட்டுமென்று!

எழுதியவர் : ஆசிபொறி (13-Sep-19, 11:10 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 349

மேலே