TEACHERS

ஆசிரியர்கள் - ஏணியை மாற தயாராய் இருக்கிறார்கள்
ஏறிச் சென்று இலக்கை அடையுங்கள்
மெழுகை உருகத் தயாராய் இருக்கிறார்கள்
பாதையின் இருளை போக்கிக்கொள்ளுங்கள்
தீக்குச்சியை தீய்ந்து போகத் தயாராய் இருக்கிறார்கள்
வாழ்வின் தீபத்தை ஏற்றிக்கொள்ளுங்கள்
சந்தனமாய் தேய தயாராய் இருக்கிறார்கள்
வாழ்வில் நறுமணத்தை வீச செய்யுங்கள்
கற்பூரமாய் கரைய தயாராய் இருக்கிறார்கள்
கப்பென்று பற்றிக் கொள்ளுங்கள்
உளியை மாற தயாராய் இருக்கிறார்கள்
உரு மாற்றம் செய்துக்கொள்ளுங்கள்

எழுதியவர் : கோமதி (13-Sep-19, 1:58 pm)
சேர்த்தது : GOMATHI
பார்வை : 80

மேலே