உன்னிடம் மயங்குகிறேன் பாகம் 8

உன்னிடம் மயங்குகிறேன் பாகம் 8

அவ எப்படியாவது போகட்டும் ! !

மொபைல் போன் வந்தவுடனே பூரணி உடனே போய் சுந்தரியை போய்ப் பார்க்க வேண்டுமென முடிவு செய்தாள். . அவள் கணவர் சாயந்தரம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் போய் பார்க்க வேண்டுமென நினைத்தாள்.
பூரணி எல்லா வேலையையும் முடித்து விட்டு யூடியுபில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்போது மதியம் மணி இரண்டு. காலிங் பெல் சப்தம் கேட்கவே யாரென்று போய்க் கதவைத் திறந்தவள் திகைப்புடன்,” நீங்களா?” என்று வியந்தாள். . வந்தது அவள் கணவர்தான்.
“ தீடிரென்று சீக்கிரம் வந்து விட்டீர்கள் ? உடம்பு சரியில்லையா ?
அதெல்லாம் ஒன்றுமில்லை. இன்று இரவு கோவைக்குப் போக வேண்டும் அதனால்தான் சீக்கிரம் வந்துவிட்டேன்.
”நீங்கள் வந்தது ஒரு விதத்தில் நல்லதாயிற்று. என் சிநேகதி சுந்தரி ஆஸ்பிடலில் இருக்கிறாள். அவளுக்குக் கண் அறுவை சிகிட்சை இந்நேரம் முடிந்திருக்கும். என்னை ஆஸ்பிட்டலில் கொண்டுபோய் விடுங்கள்” என்றாள். அவள் சொன்னைதைக் கேட்டு அவர் சிறிதுகூட கவலைப்படாமல், ”அவ கிடக்கிறா. நீ வா என் என்று அவளை அப்படியே குண்டு கட்டாய் தூக்கி அவளைக் கட்டிலில் கிடத்தி அவள் நெற்றியில் முத்தமிட்டார். அவளுடைய புடவையை உறுவினார்.
”ஏங்க நான் ஆஸ்பிட்டலுக்குப் போகணும். . அவளைப் போய் பார்க்கணும். என்னை விடுங்க”என்று பூரணி அவர் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு வெளிவர முயன்றாள். .
”நான் இன்று இரவு கோவைக்குப் போகணும். திரும்பி வர நான்கைந்து நாட்கள் ஆகும். சுந்தரியை நாளைக்குப் போய் பார்த்துக்கோ இன்னைக்கு...... .அதனால்தான் சீக்கிரம் வந்தேன்” என்றார்.
“ நான் வராவிட்டால் தப்பாக எடுத்து கொள்வாள். தயவு செய்து என்னைப் போக அனுமதியுங்கள். நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்று கெஞ்சினாள் பூரணி . அவளின் வேண்டுகோளுக்கு அவர் கணவர் மசியவில்லை.
அவர் சொல்லை மீறிக் கிளம்ப முயற்சி செய்தாள். அவர் கோபத்துடன் இழுத்துப் படுக்கையில் கிடத்தி இரண்டு கைகளையும் . கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அவள் ஆடைகள் எல்லாம் ஒவ்வொன்றாகக் கீழே விழுந்தன. . பூரணியால் அவர் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சரண் அடைய வேண்டியதாயிற்று. .அவர் அவள் மேல் படர்ந்தார்.
”அவ எப்படியாவது போகட்டும். நாம் இன்பமாய் இருக்கலாம்” என்று இதழை இதழால் உறிஞ்சினார்.
பூரணி வருவாள் என்று காத்திருந்தாள் சுந்தரி வெகுநேரம் ஆகியும் பூரணி வரவில்லை. ”ரொம்ப நேரம் காத்திருக்க முடியாது” என்ற டாக்டர் சுந்தரிக்குக் கண்களில் அறுவை சிகிச்சை செய்து விட்டார்.
பூரணி உம்மென்று இருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை . பூரணியின் கணவர் தான் போகவிருந்த பயணத்தில் திடீரென்று ஒரு மாற்றம் செய்தார். அன்று இரவு அவர் கோவைக்குக் காரில் செல்லும்போது வரமாட்டேன் என்று கதறிய பூரணியை தன்னோடு அழைத்துச் சென்று விட்டார்.” சாரி சுந்தரி நான் வரவேண்டுமென்றுதான் பார்த்தேன். ஆனால் என் கணவர் ஒத்துழைக்கவில்லை. நான் நேரில் பார்க்கும்போது எல்லாவற்றையும் உன்னிடம் சொல்கிறேன்” என்று மனசுக்குள் நினைத்தாள்.
பூரணி அறுவை சிகிச்சை ஆன அன்று அவள் மருத்துவ மனைக்கு வரவில்லை. அதற்குப் பிறகு மூன்று நாட்கள் ஆன போதும் அவள் வந்து பார்க்கவில்லை.
அவள் படுக்கையில் படுத்திருந்தாள். அவள் அம்மாதான் வேளா வேளைக்கு கண்ணுக்கு மருந்து போடுவாள் .
”உன் உயிர்த் தோழின்னு சொன்னாயே . அந்தப் பூரணி ஒரு முறை கூட வந்து பார்க்கல. அவளை நீ ரொம்ப அந்நோன்யமாய் நினைக்கிறாய். ஆனா அவ செய்யறதை பார்த்தாயா. உன்னைப் பார்க்க வரல”.
”அம்மா அவள் நல்லவதான். ஊரிலே இருக்கிறாளோ என்னவோ தெரியல. அவளுக்கு என் அறுவைசிகிச்சை பற்றி தெரிந்தால் உடனே வந்து பார்த்திருப்பாள்”.
பூரணியைப் பற்றித் தவறாக நினைக்கவில்லையென்றாலும் அவள் அம்மா சுந்தரியின் மனசில் அந்த எண்ணத்தை உண்டாக்கி விட்டாள்.
சுந்தரிக்கு அம்மா சொல்வது சரி என்று தோன்றியது. உயிர்த் தோழி என்று நினைத்தேன் என் அந்தரங்க விஷயம் எல்லாம் அவளிடம் பகருவேன்.. என்னை வந்து பார்க்க முடியாதபடி அவளுக்கு என்ன முக்கியமான வேலை. நட்பு என்பது இதுதானா? சே, அவளைப் போய் என் உயிர்த் தோழி என்று நினைத்தேனே . நான் ஒரு முட்டாள். இனிமேல் அவளுடன் நெருங்கிப் பழக கூடாது என்று எண்ணினாள்.
காலத்தினால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்றார் வள்ளுவர் . பூரணி எத்தனையோ உதவிகளைப் சுந்தரிக்குச் செய்திருக்கிறாள். ஆனால் அது எதுவும் சுந்தரிக்கு ஞாபகம் வரவில்லை. அவள் ஆஸ்பத்திரிக்கு வந்து தன்னைப் பார்க்காததுதான் பெரிய குற்றமாகத் தோன்றியது.
தொடரும் ....

எழுதியவர் : Shivani (13-Sep-19, 2:38 pm)
சேர்த்தது : shivani
பார்வை : 54

மேலே