நீ தேவதை தான்

திராட்சை கண்கள்
திருத்தப்பட்ட புருவம்
நிலா போன்றொரு சாந்து
சின்ன திருநீறு கீற்று
சுண்டு விரலால் தீட்டிய மை
சுருக்கமில்லா நெற்றி
ஜிமிக்கி கம்மல்
காது மடல் பஞ்சு கேசம்
தேக்கு போன்று மூக்கு
சந்தன கிண்ணம் கன்னம்
தங்க தகடு உதடு
வரிகளால் ஆன அதரம்
அடுக்கிவைத்த வெள்ளி போல பல்
சிதறும் சிரிப்பு
சங்கு கழுத்து
பின்னி பிணையும் சங்கிலி
ஏறி இறங்கும் தொண்டைக் குழி
மாநிற தேகம்
அவிழ்த்த கூந்தல்
இழுக்கும் பின்னங்கழுத்து
மயக்கும் மல்லிகை பூ
மடிப்பில்லா இடுப்பு
இடுப்போர வியர்வை
அன்னம் போல நடை
முந்திரி தோட்டத்து முதுகு
ஆளில்லா சாலை போல முதுகு நீள் பள்ளம்
முழு பௌர்ணமி போல வளையல்
மணியான மணிக்கட்டு
ஆட்காட்டி விரல் வட்ட மோதிரம்
அதையொட்டி ஓடும் பச்சை நரம்புகள்
நகம் என்னும் சிம்மாசனம்
கண்ணை மயக்கும் கணுக்கால்
நடையின் இடைவெளியில் உள்ளம் பாதம்
கால் கொலுசு
அலட்சிய பார்வை
திமிர் நடை
தேன் குரல்
ஓரப்பார்வை
உதடு சுழித்தல்
மட்டி கடிக்கிறது என.....
ஆம்
நீ தேவதை தான் ❤


Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (13-Sep-19, 3:37 pm)
Tanglish : nee thevathai thaan
பார்வை : 474

மேலே