அன்பே

சிறியதுதான் மனது
உன் தீராக்
காதலில் நிரைந்து ததும்ப
சிதறல்களின் வழியே
நீ
நகைத்து செல்கிறாய்..
இமைகள் விலக்கிக்
கனவுகளில் நுழைந்து
உறக்கத்திலேயே கடத்திச்செல்கிறாய்..
அசாதாரண கவிதைநீ..
முற்றுப்பெறாமல்
முத்தங்கள் பொழிகிறாய்..
விழிகள்வழியே
வழியவிடாமல்
சிறைப்படுத்திவிடு..
உன்
எண்ணக்கூட்டின் சாளரக்காற்றில்
என் சிறியமனது
சுவாசித்துக்கொள்ளட்டும்..

எழுதியவர் : M.Rafiq (13-Sep-19, 7:01 pm)
Tanglish : annpae
பார்வை : 186

மேலே