பிள்ளை விளையாட்டு

வெள்ளை உள்ளம் கொண்டதாலே
வேறு பாடுகள் பார்ப்பதில்லை,
பிள்ளை யாக இருக்கும்வரை
பேதம் எதுவும் வருவதில்லை,
கள்ளம் மனதில் இல்லாததால்
கவலை வீணே கொள்வதில்லை,
தள்ளி நிற்பீர் பெரியோரே
தடுக்க வேண்டாம் விளையாட்டையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Sep-19, 7:57 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : pillai vilaiyaattu
பார்வை : 25

மேலே