குழந்தை,மனிதன், மரம் -தத்துவம்

முத்துக்குளிக்க நினைப்பவன்
ஆழ்கடல் தேடி போவான்
திரைகடல் ஓடோ திரவியம் தேட
வணிகன் கப்பலில் பயணம்
மீன் பிடிக்க மீனவன் கடலில்…….
இப்படி இவர்கள் எல்லாம்
அலைகிறார் தொழில் நிமித்தம்

ஆனால் ,கடற்கரை மணலில்
மணல் வீடு கட்டும் குழந்தைகள் …..
ஒருவன் வீடு கட்ட , இருவர் அவனுக்கு
தெரியாமல் கட்டிய வீட்டை
கலைப்பார் ….. இவன் திரும்பிப்பார்க்க
ஓ வென்று கை தட்டி சிரிப்பார் …..
பின்னர் ஒருவரை ஒருவர் துரத்தி
சிரித்து மகிழவார் ,,,,,,,,
பின்ன, தாய் தந்தையாருடன்
கடல் அலையைக் கண்டு களிக்க
கரை சென்று வரும் அலை நீரில்
கால் நனைத்து மகிழவார்
அங்கு பாதத்தை வருடும்
நண்டுகள் கண்டு முதலில் பயந்து
பின் மகிழவார்
அலைகள் அடித்துவந்து கடலோரம்
சேர்க்கும் கிளிஞ்சல்களை அள்ளி அள்ளி
'பாண்ட் பாக்கெட்டில் ' நிரப்பிக்கொள்ள
வீடு திரும்புவார் . நல்ல நீரில் குளித்து
பாட்டி செய்த இட்டிலியை சுட சுட
உண்டு ….. தாயின் தாலாட்டில்
துயில் கொள்ளும் பருவம்.....

இந்த குழந்தைப் பருவத்தில் இவர் மனதில்
கல்மிஷங்கள் ஏதும் இல்லை,குருட்டு
வழிகள் இல்லை . கேவலமான சிந்தனைகள்
ஏதுமில்லை , மகிழ்ச்சி தவிர

அந்தோ, பெரியவராய் வளர வளர
இந்த அப்பாவித்தனம் மெல்ல மெல்ல
பொய் சூதும் வாதும் வருவதேனோ ..

வளரும் மரம் பூவாய் இலையாய்
காய்க்க கனியாய் குலுங்க
காலத்தால் மாறாது அவ்வண்ணமே இருக்க
பொய்யும் புரட்டும் மனிதனை
தாக்குவதேன் காலச்சூழலில்,,,,,?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Sep-19, 3:43 pm)
Tanglish : thaththuvam
பார்வை : 433

மேலே