பஜகோவிந்தம் 3 பா 5 6 7

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே !
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தமென சொல்லடா மூடா !

5 .
பொருளினை ஈட்ட இயலும் வரையில்
விரும்பி யுனைநேசிக் கும்நினது நற்குடும்பம்
ஈட்ட இயலா முதுமையில் வீட்டிலுனை
கேட்கவும்ஆள் இல்லை யடா ?

ஆதலினால் பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தமென சொல்லடா மூடா !

6 .
வீட்டார் உடலில் உயிர்க்காற்று உள்ளவரை
கேட்பார் குசலநலம் காற்று அகன்றிடின்
அன்பு மனைவியும் அஞ்சிடுவாள் பீதியில்
உன்னுடலைத் தொட்டிட வே !

ஆதலினால் பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தமென சொல்லடா மூடா !

7 .

இளம்குழந் தைப்பரு வம்விளை யாட்டில்
இளமைப் பருவம் இளம்பெண் அருகில்
முதுமைப் பருவத்தில் சிந்தனையே முற்றும்
இதுபரம் என்பதிலை யே !

ஆதலினால் பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தமென சொல்லடா மூடா !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-19, 5:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே