அம்மாவின் ஆசை

டேய்..சிவா எழுந்திரு ...டேய்...சிவா எழுந்திரு..அம்மாவின் குரல்
தேனாய் இனித்தது...இரும்மா இன்னும் கொஞ்ச நேரம் என சொல்லி
இழுத்து மூடிய போர்வையை ....விளக்கி விட்டு..அடித்துக்கொண்டிருந்த
மியூசிக்கை நிறுத்தினான்....

அம்மாவின் குரலை பத்திரப்படுத்தி செல்போனில் வைத்திருந்தான் சிவா....
அதுதான் இவ்வளவு நேரமும் அவனை எழுப்பி விட்டது...

எழுந்து வெளியே வந்தவன்...வீட்டு வாசலில் கூடியிருக்கும் கூட்டத்தை
பார்த்து விட்டு என்னாச்சு..ஏன் எல்லோரும் இங்கே வந்து
நிக்கிறீங்க என்று கேட்க...

என்ன சிவா தம்பி இன்னைக்கி நம்ம வயல்ல அறுவடை நாளாச்சே
வாங்க நீங்க வந்துதான் ...மொதல்ல துவக்கி வைக்கணும் என்று
ஊர் மக்களெல்லாம் சொல்ல..... நீங்க போங்க இன்னும் இரண்டே
நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி... வீட்டுக்குள் வந்தான் சிவா

அம்மா.... வெளி நாட்டுல வேலை செய்த என்னை நம்ம நாட்டு
விவசாயத்தை எடுத்து சொல்லி... ஊர் சனங்களையெல்லாம்..
ஒன்றாக்கி... இருக்கும் பணத்துல நாலு வயக்காட்ட... வாங்கிப்போட்டு....
பக்கத்துலேயே கிணற்ற தூர்வாரி...விவசாயத்த‌
அமோகமா...வெலய வச்சு.... இன்னைக்கி அறுவடைக்கும்
தயாராகி நிற்கும் இந்த வேலையில நீ மட்டும் இல்லையே அம்மா..
என்று கண்ணீரோடு நின்று கொண்டிருந்தவனின் பக்கத்தில் வந்து
நின்றாள் மல்லி....

வா மாமா அத்தை நம்ம கூடதான் இருப்பாங்க என்று சொல்லி
அத்தையின் போட்டோவுக்கு மாலை போட்டு விட்டு சிவாவை...
அவள் அன்னையாகவே..மாறி..அழைத்தாள் மல்லி....
டேய்..சிவா..வாடா.. நேரமாச்சு சூரியன் உதிக்கரதுக்குள்ள வயல்ல‌
இறங்கலாம் என்றவளை..

உன்னை என்று சொல்லி கை ஓங்கி வந்தவன்..அவள் கைகளுக்குள்ளேயே....தன் கையை
இணைத்துக்கொண்டு நடக்கத்துவங்கினான்....அம்மாவின் கனவை
நிறைவேற்றுவதற்காக.......

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (14-Sep-19, 9:19 pm)
Tanglish : ammaavin aasai
பார்வை : 194

மேலே