ஐயகோ

#பதாகைக்_கலாச்சாரம்

ஐயகோ
பதாகை விழுந்து
நன்மகள் சுபஸ்ரீ
நொடிப்பொழுதில் மரணம்
நெஞ்சு பொறுக்குதில்லையே
இதோ இரண்டு மூன்று நாள்
கத்துவோம் கதறுவோம்
சமூக வலைதளப் பக்கங்களிலும்
புதினக் குழுக்களிலும்

பதாகைகள்...
அவர்கள் பதவிகளுக்கான
நுழைவாயில்
உச்சம் தொட்டோர்
சாட்டையெடுப்பர் சவுக்கெடுப்பர்

அதோ அடுத்த பிறந்தநாளைக்கு
ஆங்கோர் பதாகை
அம்சமாய் அலங்கரிக்கும்
அதன் நீள அகல
அளவுகளைத் தாண்டி
நம் வாகனங்களும் சும்மாய்க்
கடந்து செல்லும்

நம்வீடு, நம்மூர்
சுப துக்க காரியங்களிலும்
திருவிழாத் தேவைகளிலும்
நம் பெருமை நிலை நாட்ட
நாமும் பதாகை வைப்போம்

நாம் நேசிக்கும் சுவாசிக்கும்
நாயகர்களுக்கும்
பதாகை வைக்கப் புறப்படுவோம்

ஆனால் இன்று
பதாகைகளுக் கெதிராக
நாமும் கொடி பிடிப்போம்
மாற்றத்தை விரும்பும்
நாமெப்பேதும் மாறாமலிருப்போம்...
வாய்ச்சொல் வீரர் நாம்!

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (15-Sep-19, 3:23 am)
Tanglish : iyago
பார்வை : 68

மேலே