ஆசையே

ஆசை வேண்டும் அளவோடு
அதனை அடைந்திடு நெறியோடு,
நேசம் என்பது நெஞ்சிலுண்டு
நெருங்கும் உறவுடன் கொஞ்சலோடு,
வேசம் போடாதே வாழ்வினிலே
வெளியே தெரிந்திடும் கொஞ்சநாளில்,
ஆசை வைத்திடு மனைவியிடம்
ஐம்பதைத் தாண்டியும் தொடர்ந்திடுமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Sep-19, 7:34 am)
Tanglish : aasaiye
பார்வை : 175

மேலே