வாழ்வும் சதுரங்கமும் பகுதி -6 ராணி பாகம் 2

வாழ்வும் சதுரங்கமும் பகுதி -6

ராணி - இவ்வுலகில் நீங்கள் நேசிக்கும்


நீங்கள் என்றாவது உங்கள்
ராணியை இழந்து இருக்கிறீர்களா ?
ராணியை இழந்து
நிம்மதியாய் வாழ்ந்து
இருக்கிறீர்களா ?

ராணியே உங்கள் வாழ்வு
ராணியே உங்கள் மோச்சம்
உங்கள் பிறப்பும் இறப்பும்
ராணிக்கே என்று வாழ்ந்த
உங்களால் இழப்பை
தாங்க முடியவில்லை
இழப்பை ஏற்க முடியவில்லை
என்றால் இதை படியுங்கள்

சதுரங்கத்தில் ராணியே
பெரும் பலம்
அதே சமயம் ராணிதான்
மிகப்பெரும் பலவீனம்

ஏனென்றால் இந்த ராணி
பலரின் வாழ்வில்
பல வழியில்
பல திருப்பங்களுக்கு
காரணமான ஒன்று

ராணியை இழந்தால்
சதுரங்கமே தலைகீழாகிறது
பெரும்பாலும் அது
தோல்வியிலே முடிகிறது

காரணம் ராணியா
இல்லை ராணியை
காக்க தவறிய நீயா

ராணியால் நீ
கவரப்பட்டதன் விளைவா
இல்லை ராணியே உன்
நம்பிக்கையானதன் விளைவா

இந்த வினாவிற்கு விடையை
நாம் அன்றாடம் பார்க்கிறோம்
ஏன் நீங்களும் நானும்
கூட வினாவாகவும்
விடையாகவும் சிலரின்
வாழ்வில் இருந்திருக்க கூடும்

ஆம் காதல் தோல்வியில்
பல மரணங்கள்
நட்பின் துரோகத்தில்
பல மரணங்கள்
பண மோகத்தில்
பல மரணங்கள்

ஏன் இத்தனை மரணம்
இந்த ராணியால்
ராணியை இழந்தால்
அதை மீட்க முயலலாம்
மீட்க முடியாவிடில்
மரணம் தான் தீர்வா

மற்றவர்கள் உன்
வாழ்வில்லையா
உனக்காக ஏதும் செய்ய
சிப்பாயாக யானையாக குதிரையாக
எத்தனை நம்பிக்கை
உன்னைச்சுற்றி

அதனை மறந்து
ராணியே உன் வாழ்வென கொண்டு
ராணிக்காக வாழ்வை தொலைப்பது
எப்படி நியாயம்jQuery171033575808270514196_1568534561984?

இங்கே ராணி
உன் காதலாகவோ
உயிர் நட்பாகவோ உறவாகவோ
பணமாகவோ பந்தமாகவோ
இல்லை நீ நேசிக்கும்
எதுவாக வேண்டுமானாலும்
இருக்கட்டும்

ஒன்றை மட்டும் நினைவில்கொள்
ராணி என்பது உன் வாழ்வின்
ஓர் அங்கமே தவிர
ராணி மட்டுமே உன்
வாழ்வில்லை
இதனை உணர்ந்தால்
வாழ்வு விடியலாகும்
இல்லையேல் இருட்டறையே

எழுத்து சே.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (15-Sep-19, 1:32 pm)
சேர்த்தது : இனியன்
பார்வை : 82

மேலே