அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா 🙏🏽

காஞ்சியிலே பிறந்த அத்தி வரதர் அல்ல இவர் புத்தி வரதர்.

தர்பார் அரசியலை தரைமட்டமாக்கிய தன்மான தமிழன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்
என்ற ஈர நெஞ்சுக்கு சொந்தகாரர்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் சொன்ன
மா மந்திரத்தை மாநிலம் முழுவதும் முழங்கியவர்.

சாமானியனின் கனவை
பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை என்ற ரதத்தில் பயணித்து அவன் கனவை நிறைவேற்றய தென்னாட்டு பெர்னாட்ஷா.

மாநிலத்தில் சுயாட்சி
மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை உரக்க கூறிய திராவிட
தீ பந்தம், தமிழரின் தீபகற்பம்

கூன் போட்டு ஆண்டே என்று கூறி குறுகி இருந்தவனுக்கு தன்மானம் கற்பித்து வாழ்க்கையில்
நிமர செய்து அவனை சிம்மாசனத்தில் அமர செய்த பெருமை பேரறிஞரையே சாரும்.

பேச்சே இவர் பேச்சு கேட்டு மயங்கும்.
மடையை திறந்த வெள்ளம் போல் வார்த்தைகள் தங்கு தடையின்றி இவர் திருவாயிலிருந்து வந்து விழும்.
தமிழ் அவர் நாவினிலே ஆனந்த தாண்டவம் ஆடும்.
ஆர்பரித்து அலையன மக்கள் கூட்டம் அதை கேட்டு ரசிக்கும், ருசிக்கும், வழிநடக்கும்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
மிகபெரிய
சமூக கோட்பாட்டை சூளுரைத்த மாமேதை
தமிழ் தாய் பெற்றடுத்த தங்க மகன்
தன்மான தமிழனின் மானம் காக்க வந்த மகத்தான மரதமிழன் பேரறிஞர் அண்ணா.

- பாலு.

எழுதியவர் : பாலு (15-Sep-19, 3:05 pm)
சேர்த்தது : balu
Tanglish : aringar ANNAA
பார்வை : 364

மேலே