காதல் நாடகம்

போர்த்திய உடலை தழுவும்
கண்களுக்கு

என் வெட்கம் மட்டும்
தெரிய

அதையே என் சம்மதமென
அறிய

உதவிக்கு வந்துவிட்ட கைகள்
உடைகளைக் கலைய

உதடுகள் உதிர்க்கும் வார்த்தை

வேண்டாம் வேண்டாம் என்று
நடிக்க

உடல் நெளியும் கூச்சத்தில்
எனக்கும்

இதற்கும் சம்பந்தமில்லை என

மூடிகொள்ளும் கண்கள் இந்த
தழுவல்

காதல் நாடகத்தின் ஓர் அங்கம்

எழுதியவர் : நா.சேகர் (15-Sep-19, 7:12 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal naadakam
பார்வை : 164

மேலே