கூடுதலாய்

கூண்டுக் கிளியைப் பார்,
கொஞ்சுவதில்
கொஞ்சமில்லை சந்தோஷம்..

அஞ்சும் கிளி
தஞ்சம் புகுந்தது கூட்டில்,
அதைக்
கொஞ்சமும் தயக்கமின்றித்
திறந்து வெளியே
பறக்கவிடு..

திறக்கும் சந்தோஷக் கதவுகள்
கூடுதலாய்க்
கிளிக்கு-
உனக்கும்தான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Sep-19, 7:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 62

மேலே