உயர் காதலுக்கு நாமே ஆதாரம்

நீ விரும்பி ரசிக்கும் பாடல்
என் இதயத்தில் ரீங்காரம்.....
செவிபடு ஒலியாவிலும் உன் ஓங்காரம்.....

உன் நினைவுகளே நித்தம் ஆகாரம்....
என் உயிரின் துடிப்பே உன் உபகாரம்

தீந்தமிழ் நீ இருக்க எனக்கேது சேதாரம்
திவ்வியத் துணை உன் சன்னதியே கேதாரம்

என் காலம் இனி எப்போதும் உந்தன் சுவீகாரம் ....
உயர் காதலுக்கு இனி நாமே ஆதாரம்.....

எழுதியவர் : வை.அமுதா (16-Sep-19, 9:37 am)
பார்வை : 64

மேலே