விசித்திர விடியல்

விடியும் என்ற நம்பிக்கையில்
முடிந்தவரை போராடி
உண்டி உடுக்கை இன்றி வாழும்
உழைப்பாளர் கூட்டம்.....

உதிரம் உருஞ்சும் அட்டைப் பூச்சிகளாய்
ஊன் உண்ணும் மாமிசப் பட்சிகளாய்
எளியோரை வாட்டி வதைக்கும்
வலியசண்டியர் கட்சிக் கூட்டம்....

ஓயாது ஓய்வில் கிடந்து
மண்டியிட்டு மானம் துறந்து
அண்டி வாழும் யாசகக் கூட்டம்....

அனைத்து கூட்டமும் நாட்டமாய்
எதிர் நோக்கிக் காத்திருக்க...
விடியல் தரும் நித்திய விளக்காய்
கீழ் வானில் கதிரவன் உதயம்...
அதன் ஒளிவெள்ளம் எண்திசையும் பாய.....
இதோ மீண்டும் ஒரு நாள் துவக்கம்...,

வீரியம் ஆகுமோ....?
விரயம் ஆகுமோ...?
விவரம் அறிய முடியா
விசித்திர விடியலில் நாம்....

எழுதியவர் : வாழ்க்கை (16-Sep-19, 9:53 am)
பார்வை : 54

மேலே