பெண்ணை வர்ணிப்பது பெண்ணுக்கு பிடிக்குமா

அழகினை வர்ணிக்கவே ஆண்டவன் படைத்தான்
அழகொன்றி தோன்றும் அனைத்திலும் ஆபத்தையும் சேர்த்தான்....
தூரத்தில் நின்று வர்ணித்து சென்றுவிடும்
ஆழத்தை அளந்தாயானால் ஆரிருள் சேர்ந்துவிடும்...

முக்காலமும் பெண்ணை வர்ணித்தே இருந்தனர்
மூப்படைந்தாலும் பெண் அப்போதும் சிலிர்த்தனர்...
ஈசனின் இடர்கால திருவோடுபோல, தோத்திரம்
எத்துனை இட்டாலும் நிரம்பாது பெண் மனமே ....

எழுதியவர் : இராஜேஷ் குமார் சி (16-Sep-19, 9:56 am)
சேர்த்தது : இராஜேஷ் குமார் சி
பார்வை : 944

மேலே