அவள் ஒரு கேள்விக்குறி - 5

அர்ச்சனா ஒரு அழகு தேவதையாக பள்ளிக்குள் நுழைந்தாள்.

ஆலய மணி ஓசையின்

இசையாய்

ஈடில்லா அவளது அழகு

உலகமே தன்னைப் பார்க்க வேண்டுமென

ஊர் சுற்ற மனக்கணக்கை தொடங்கினாளே,அவளது கள்ளம் களங்கமில்லா குணம் ,கொள்ளை அழகு

எல்லோரையும் கொள்ளைக் கொண்டதே

ஏணி வைத்தாலும் எட்டாத அழகைக் கொண்டவள்

ஐயமின்றி

ஓரக்கண்ணால் பார்க்காத ஆணில்லையே

ஓவியம் போல் இருப்பாள்

ஒளவாறே ஒரு அழகு தேவதை பூமிக்கு வந்துவிட்டாள்.என் நண்பன் கூறினான் :நமக்கும் வாய்த்து இருக்கிறதே நம் அணியில் ,ஓட்டை உடைசலாய்

நமக்கு மட்டும் ஏன் இந்த அழகு மங்கை போல் ஒருத்தி அமையவில்லை. எல்லாம் கடவுளின் செயல்.

என்ன கொடுமை. உண்மைதானே ?

நல்ல கலகலப்பாக தன் தோழர்களிடம் சிரித்துப் பேசுவாள்.

தன் ஆண் தோழர்களிடம் அளவற்ற நம்பிக்கை கொண்டவள். நட்புக்கு மரியாதை கொடுப்பவள்

அவர்களுடன் வெளியில் சாப்பிடவும், தேநீர் அருந்தவும் தைரியமாக செல்வாள்.

சிடு சிடுவென சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபித்துக் கொள்ளும் குணமுடையவள்.

ஒரு சிடுமூஞ்சி தான். ஆனால் ஒரு கலகலப்பான சிடுமூஞ்சி அவள்.

இந்த பள்ளியில் தான் தான் மிக அழகியவள் என நன்றாக தெரிந்தும் கொண்டாள்.

நிறைய தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருந்தும் தனக்கு ஒரு அறிய வாய்ப்பு கிடைத்ததே எனப் பெருமைக் கொண்டாள்.

வெளியுலகம் போய் கற்ற கலையெல்லாம் நிரூபிக்க நேரம் வந்ததே என கர்வம் கொண்டாள்

நம்பிக்கையும் கொண்டாள்

தடைகள் பல வந்தது.

விமான டிக்கெட்டுகள் விலை அதிகமென இவளை அனுப்பவில்லை

கதறி அழுதாள் உள்ளுக்குள்.திடீரென பாதி வேலை முடிந்ததும் இவளை வர சொன்னார் மூத்த ஆசிரியர்

குழப்பம் பதற்றம் எல்லாவற்றுடன் நண்பன் என நம்பிக்கையில் வலம் வந்தவன்

இப்படி செய்வானென அவள் கனவில் கூட நினைக்கவில்லை .

வெளியுலகத்தில் அவன் குணம் மாறுமென்றே அவள் நினைக்கவில்லை

அவன் பல நாள் கணக்கு போட்டிருப்பான் போல ...

சண்டாளன் கூப்பிட்டான் வேலை இருக்கு

என் ரூமுக்கு வா என்று .........

எழுதியவர் : கவிராஜா (16-Sep-19, 10:10 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 117

மேலே