நல்ல நட்பு

மஹாபாரத யுத்தம் நடக்க போகிறது …..
பாண்டவ கௌரவர்களை அழைத்தான் கண்ணன்
பாண்டவர் தரப்பில் தர்மரும் கௌரவர் தரப்பில்
துரியோதனனும் அழைக்கப்பட்டவர்கள்…
இருவரையும் நோக்கி கண்ணன் கேட்டான்
உங்களில் யாருக்கு நான் வேண்டும் , எனக்கு
பெரும்போர்ப்படை ஒன்றே போதும், என் பக்கம்
பீஷ்மர், துரோணர், கர்ணன் , அஸ்வத்தாமன் இருக்க
கண்ணா நீ எனக்கு தேவை இல்லை என்றான்..
தர்மனோ கரம் கூப்பி'கண்ணா நீ மட்டும் எங்களுக்கு
துணையாய் இருந்தால் அது ஒன்றே போதும் கண்ணா'
என்றான் ...…

போர் மூண்டது …..பதினெட்டு நாள் போரின் முடிவில்
கௌரவர் தரப்பில் எல்லோருமே மாண்டுபோனர்

எல்லாரையும் இழந்தான் துரியோதனன், முப்படை
பீஷ்மர், துரோணர் , கர்ணன் எல்லாம்
முடிவில் பீமனால் அவனும் மாள்கின்றான் …

பாண்டவர் போரில் வெற்றிபெற்றனர்
இவரில் ஒருவரும் மாளாது
அர்ஜுனனுக்கு சாரதியை வந்தான் கண்ணன்
நல்ல நண்பனாய் , ஞான குருவாய்...

நல்ல நண்பன் ஒருவன் கிட்ட உலகையே
நீ வென்றிடலாம் ….. தீயோர் நட்பு தீமையே
தந்து முடிவில் அழிவையே சேர்க்கும்
பாண்டவர்க்கு நல்லதோர் நண்பன் கண்ணன் கிட்ட
வெற்றிப்பாதையில் அவர்கள்…. துச்சாதனன் போன்ற
தீயோர் சேர்க்கை கௌரவரை அழித்தது முற்றும்

நல்ல நண்பன் நலம் தரும் வாழ்வு

கதை சொல்லும் நட்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Sep-19, 3:09 pm)
Tanglish : nalla natpu
பார்வை : 811

மேலே