மலரே மெளனமா

" உன் மேனி
படா இடமும்
உண்டோ

கருவறை
முதல்
கல்லறை
வரை

இளமை
முதல்
முதுமை
வரை

வாழ்வு
முதல்
முடிவு
வரை

உன் வெற்றியின்
ரகசியம்
புரிந்தது

அழகையும்
நறுமணத்தையும்
சிதறவிட்டு

வெற்றிக்கு
வித்தான
மெளனத்தை

மூலதனம்
ஆக்கினாய்

சமத்துவம்
காட்டி
தரணியில்

தனியிடம்
பிடித்தாய்

மலரே
மெளனமே
உன்
கெளரவம் ... "

எழுதியவர் : சிவமணி பரசுராமன் (16-Sep-19, 11:01 pm)
சேர்த்தது : சிவமணி பரசுராமன்
பார்வை : 122

மேலே