முத்து விழா வாழ்த்து மடல்

முத்து விழா வாழ்த்து மடல்

சீர்மிகு சோனாட்டின் வீரத் தளபதியாம்
ஆர்தலிலா வந்தியத் தேவனின் -- காரிகை
குந்தவையைக் கைக்கொண்டான் சொந்த சிறுநாடு
அந்தக்கா வேரிப்பாக். கம்

அவர் குடிமை நாடும் கவல்கொளாத் தொண்டைக்
கவின்வளநாட் டில்மூன்று போகம் --- நவிலும்
கொழுனன் வெங்கடாச லம்நெமிலிக் கீழ்வீதிக்
கோழ்த்திரிவே ணித்தம் பதிக்கும்

நற்றவத்தி னாலவர்கு நான்காம் மகவாய்
நரசிம்ம னுதிக்கப் பெற்றார் -- அறமுடன்
நற்பண் பொழுக்கம் பக்தியும் கற்றிவர்
பெற்றார் இளங்கலைப்பட் டம்

படித்தபின் கூட்டுறவி லாகாப் பதவி
அடிக்கடிமா றாப்பணியே சென்னையில் --- மட்டும்
துடிப்பாய் உழைக்கப் படிபடிப்முன.னேற்றம்
கிடைத்த திணைப்பதிவா ளர்

நல்லொழுக்கச் சீமான் நரசிம்மன் இல்லாள்
திலகவதி பக்திப் பழமாம் -- உலப்பினள்
உண்மை வறியற்கு நன்மைபல செய்தவர்
பண்மைத் தொழுகைசெய்தார் கூடி

ஔவைக் கிவர்யில்லை சொந்தமாயின் ஒப்பினராம்
ஔவைதுரை சாமி மகளையும் --- ஔவை
நடராசன் நற்றுணைவேந் தாம்பார் அடங்கார்
மடக்கும் தமிழ்விரும்பி யாம்

நரசிம்மன் வறியர்துன் பம்பொறுக் காத்தன்
கரத்தால் பலருக்கும் செய்தார் உதவி
அதனைப் பட்டிய லிடநீளும் மொத்தம்
நரசிம்மன் தமையன் சுப்பிர மணியனார்
திருக்கோயில் அனைத்தும் இவரின் தணிக்கையே
அரும்பணி செய்த உத்தமராம்
எறும்பு போல உழைத்துமுன் னேறினாரே.

அருமைத் தம்பிநா வுக்கரசு மெய்கண்டன்
மெய்கண்டான் சிவஞான போதம் கற்றாரோ
மெய்யாய் தமிழ்பக்தி வளர்த்தார்
மெய்யன்பர் கேட்டு மகிழ்ந்து போற்றினரே

நரசிம்மன் மாமாவும் ஔவை துரைசாமி
நரசிம்மன் மைத்துனர் ஔவை நடராசன்
முன்னவர் போற்றும் பேராசிரி யராம்
பின்னவர் தமிழ்த்துணை வேந்தர் அறிவோம்
ஔவை யின்பெயர் வைத்து
ஔ வைப் புகழ்பரப் பியசெம் மல்பாரீர்.

நரசிம்மன் மக்களாம் உமாமுத் துக்குமார்
நரசிம்மன் உறவுகள் அமுதா சிவாவும்
தொகுத்த மோசூர் பழனியும் உறவே
தொகுப்பின் இளசுகள் நிற்கிறார் காத்து
அகமகிழ்ந்து அகவை எண்பதில்
அன்னார் நரசிம்மன் வாழ்த்தினை ஏற்கவே

அகவை என்பதைக் கடந்தீர் வாழ்கவே
ஆயிரம் முழுநிலவைக் கண்டவரே வாழ்க
அதனினும் சனிமூன்று சுற்றல் கண்டவரே
ஐயமின்றி பிணி பீடை நீங்கி வாழ்கவே
வாழ்க நரசிம்மன் வாழ்கவே
வாழ்க பல்லாண்டென வாழ்த்தும் இறைவனே

ஆர்.ராஜன் பழனி

எழுதியவர் : பழனிராஜன் (17-Sep-19, 8:40 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 56

மேலே