அவள் ஒரு கேள்விக்குறி - 6

முடிக்க
அத்தியாயத்தின் தலைப்பைச் சேர்க்க
ஒரு வாரம் தங்கி கருத்தரங்கில் பங்கேற்க வந்தவளுக்கு திடுக்கிடும் தொந்தரவுகள்.

அவன் முதலில் நண்பனாக தானே பழகினான்.

இவளும் அவனிடம் நெருங்கிய தோழியாக தானே பழகினேன். ஒரு குழந்தைக்கு தந்தையானவன் இப்படி நடந்துக் கொள்வான் எனக் கனவிலும் அவள் நினைக்கவில்லை,

முதலில் வா நாம் ஒரு செலஃபீ எடுக்கலாம் என அருகில் அழைத்தான் கொடூரன்.

அருகில் மெல்ல நகர்ந்து வந்தான்.நெருங்கிய நேரத்தில் போட்டோ வேண்டாம் என்றேன்.கைகள் நடுநடுங்க என் அருகில். இரவு பனிரெண்டு மணிக்கு வா நாளை என்ன நாம் செய்ய வேண்டும் பேசலாம் என்றான்.

இவ்வுளவு நேரம் என்ன செய்தான் என்று தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என புரியவும் இல்லை.அவனது ஆசை சைகை ஏதோ சொல்ல வந்தது.

ஒரு பெண் தோழியாக ஒரு ஆணிடம் ,அதுவும் ஒரு திருமணமான ஆணுடன் நெருங்கிப் பழகினால் இப்படியா புத்தி தடுமாறும்.

நானும் எனது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டே இருந்தேன். வாங்க கீழே ஹோட்டல் லாபிக்கு செல்லலாம் என நான் கூறினேன்.

ஒரு பொது இடத்தில் வேலை செய்வது நல்லதென நானும் நினைத்தேன். அவனும் எவ்வளோவோ முயற்சி செய்து பார்த்தான்.

ஒரு மேலதிகாரியாக இருக்கட்டும் ,பெண்ணுக்கு கற்பு முக்கியமல்லவே.

பின்பு எனக்கு சாட் செய்தும் கொண்டு இருந்தான் அந்தக் கொடூரன்.

என்ன செய்ய வெளியூரில் மாட்டிக் கொண்டோமே தனியாக .....

இதற்குத் தான் என்னை விட திறமைசாலிகள் இருந்தும் என்னை தேர்வு செய்தானோ கயவன்?

நேர்காணல் சென்ற அன்று இரவே எனக்கு தொலைபேசி செய்து பேசினான். பல பேர் என்னோடு வேலை தெரிந்தவராயினும் என்னை ஏன் தேர்வு செய்தான் .

எதற்கெடுத்தாலும் பெண்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமா என்ன ?

metoo வந்தாச்சு. ஆயிரம் சட்டங்கள் வந்தாலும் ,இந்த ஆண்களின் குறுக்கு புத்தி மாறவில்லையே கடவுளே.

அவனும் அதன் பிறகு நல்லவனாக நடித்தான். அவனிடம் ரொம்ப நெருங்கிப் பலகாதே ,என எச்சரித்தான் அந்த பொறுக்கி. என்ன கொடுமை இது.

இப்படியே மூன்று நாட்கள் நரகமாய் அந்த மிருகத்துக்கு முன்னால் சிரித்தும் மனதில் வெறுத்தும் நேரம் போயின

எப்படியோ ஊர் வந்து சேர்ந்தாச்சு.

உடனே இவனைப் பற்றி தலைமை ஆசிரியிடம் அவனைப் பற்றி முறையிட்டேன். அவனை திட்டி வார்னிங் கொடுப்பார்கள் என்று நினைத்தேன்.

ஆனால் நடந்தது வேறு !

எழுதியவர் : கவிராஜா (17-Sep-19, 10:10 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 83

மேலே