டேஞ்சர் ஹய்ஸ்

புலி குட்டிகள் வாழும் இடம் பாருடா
அன்பை அறுவடை செய்யும் பாசமிகு டேஞ்சர் ஹய்ஸ் நாங்கடா
சோர்ந்து போக மாட்டோம் - ஒன்று சேர்ந்து
தோழனை தோளில் ஏத்தும் கூட்டம்
நேசம் மிகுந்த பாசம் - போனில்
சார்ஜ் இல்லாமலே பேசும்
இது மீசையில்லா சிறு கூட்டம் - ஆனால்
இளவட்ட கல்லையும் சிறு காலால் உருட்டி ஓட்டும்


யாவரையும் மதிச்சு வாழும் கூட்டம்
எங்களை மிதிச்சி போனா நடக்க விட மாட்டோம்
நாங்க ரவுண்டு கட்டி பேசுவோம்
வெண்ணிலாக்கே சோறு பெசஞ்சு ஊட்டுவோம்
சூரியனை சுண்டு விரலால் தீண்டுவோம்
மின்னலுள்ளே கரண்டெடுத்து வெளிச்சம் பெற்று வாழுறோம்

BY ABCK

எழுதியவர் : (17-Sep-19, 8:39 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 29

மேலே