போதும் நிறுத்தி விடு

நன்நேரம் அது ஓய்வெடுக்க,
யோகம் அது தூரம் செல்ல ,
சனி அது உறவாட,
நான் ஜனித்தது
இப்புவியிலே ….

விரல் மீட்டாத வீணை,
மழை துளி தீண்டாமல் வாடிய சோலை,
மனிதத்தடம் காணாத புதர்மண்டிய சாலை,
ஏமாற்றம் இவனோடு உறவாடுவதே வாடிக்கை !!

கண்களில் கண்ணட
காட்சி
பாசத்தில் அன்னை மடி சாயா
ஆசையோடு அருகில் சென்று
பார்த்தபின் தான் புரிந்தது
கண்டது கனவு என்று …

நரம்பு ,சதை ,குருதியோடு
ஈன்றெடுத்தாள்
பாசத்தை மட்டும்
விட்டுவிட்டாள்…

ஜீவன் கொடுத்து
அனுப்பி வைத்தான்
அதிர்ஷ்டத்தை கொடுக்க
ஈசன் ஏனோ மறந்து விட்டான் ..

நாலு செவற்றுக்குள்
சிந்திய கண்ணீரின்
கறை காண கண்கள் இல்லை
இங்கே …
பாவம் இவனும் ஓர்
உயிர்தானே என பரிவு காட்ட
மனம் இல்லை ….

சிந்திய விந்துவில்
வந்த பாவம்
சிந்தா கண்ணீர் கூட சொல்லும்
இவனது சோகம் ..

பிரம்மா…!!. நிறுத்திவிட்டு
இனி என்னைப்போல் ஒரு ஜீவனை
இப்புவியிலே படைக்க…
நீ படைக்கும் உயிர்களை
மூச்சு தீண்டாவிடினும்
பரவாயில்லை
என்றும் குறைந்த பட்சம்
பாசம் தீண்ட செய்துவிடு ...

என்றும் ….என்றென்றும் …
ஜீவன் ✊✊

எழுதியவர் : ஜீவன்.. (18-Sep-19, 4:09 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : pothum niruthi vidu
பார்வை : 118

மேலே