நம் சிவன்

குமரி மண்ணில் பிறந்த மைந்தன்
குவலயம் போற்றும் புகழைப் பெற்றார்,
சமரில் வந்திடும் வெற்றி தோல்வி
சாதனை படைத்தார் நிலவை நெருங்கி,
நமது நாட்டின் புகழை ஏற்றினார்
நாளை நடப்போம் நாமே நிலவில்,
அமர சாதனை படைத்த சிவன்புகழ்
அகிலம் உளநா ளதுவரை நிலைக்குமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Sep-19, 6:59 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nam sivan
பார்வை : 38

மேலே