உனை இழந்த நான்

நினைத்துருகினேன்
சிறு அருகாமை இழந்த
தருணங்களை
சில ஸ்பரிசங்கள் இழந்த
நிமிடங்களை
சிறு சீண்டல்கள் இழந்த
துயரங்களை
சில புன்னகை இழந்த
பொழுதுகளை
நினைத்துருகினேன்

கனவுகளின் ராஜ்ஜியத்தில்
நீ மட்டுமே
கைகோர்க்கும் கனவுகளால்
காலைவரை
யாகம் புரிந்து
கலைத்துவிட்டுதான் கண்விழிக்கின்றன
என் காலைப்பொழுதுகள்

தூரத்து விண்மீனாய்
கண்சிமிட்டுகிறாய்
எட்ட நின்றுமட்டுமே
பார்க்க முடியும்
தொட்டுவிட நினைத்தால்
அன்பே
காலத்தின் கைதிகள்
நாம்

குதூகலமான சில
மாலைப்பொழுதுகள்
உன்னால்
குளிர்விக்கப்பட வேண்டுமென
நான்
எண்ணிக்கொள்கிறேன்
உன்னிலேயே இருத்திக்கொள் இதை
மிகவும் ரகசியமானது
என் மனம்

எழுதியவர் : M.Rafiq (18-Sep-19, 10:43 am)
சேர்த்தது : Rafiq
Tanglish : unaai IZHANTHA naan
பார்வை : 235

மேலே