காணாமல் போனவர்கள்

நேர்மையின் வழியில் சென்றவர்கள்
சீர்மிகு மானுடம் போற்றிச்
சொன்னவர்கள்
ஆண்மை போற்றி பெண்மை
காத்தவர்கள்
மாண்புடன் தேசத்தை காத்தவர்கள்
லஞ்சத்தை நஞ்சாய் நினைத்தவர்கள்
வஞ்சத்தை அறியா நல்லவர்கள்
மொழியால் வெறுப்பை பரப்பாமல்
மொழியால் உறவை வளர்த்தவர்கள்
அரசியல் வழியே சுரண்டாமல்
அரசை அறமாய் நினைத்தவர்கள்
சாதியின் வழியே சண்டை வர
சாவே வரினும் மறுத்தவர்கள்
இவர்கள் எங்கே போனானர்கள்
அவனியில் அறிவோர் உள்ளனரோ?

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (18-Sep-19, 12:25 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
Tanglish : kanaamal ponavargal
பார்வை : 244

மேலே