சிரிப்பு

பற்கள் இன்னும் முளைக்கவில்லை
குழந்தை சிரிக்கிறாள் - பொக்கை வாய்
கன்னத்தில் குழி , அழகு சிரிப்பு
சூது வாதில்லா சிரிப்பு அது
கடவுள் குழந்தை வடிவத்தில்
இப்படித்தான் இருப்பாரா
இப்படித்தான் சிரிப்பாரோ…..
என்னை சிந்திக்கவைத்தது

தாயின் சிரிப்பு
களங்கமில்லா சிரிப்பு
அன்பு சிரிப்புஅது
அழுத குழந்தை அழுகையை நிறுத்தி
தாவி போகிறது தாயின் மாடி தேடி
அன்பைத் தேடி


அவள் சிரிக்கிறாள்
முத்து உதிர்ந்தாற்போல்
அதற்காகவே காத்திருந்த காதலன்
முத்துக் குளிக்கின்றான்
அந்த அவள் சிரிப்பை அள்ளிக்கொள்ள
காதல் சிரிப்போ ……

அவன் சிரிக்கின்றான்
தான் துரத்தி சென்ற அவளை பார்த்து
மருண்ட மானாய் சுருண்டு கிடக்கிறாள் அவள்
அவன் பார்வையெல்லாம் அவள் மேல்
அவள் உடலின் இளமையின் பூரிப்பில்
அது பேய் சிரிப்பு ….அவளை நடுங்கவைத்தது
இதுவும் சிரிப்பே அல்லவா

அவர் சித்தர் , சிரிக்கிறார்
தன்னைப் பார்க்கவந்தவரை நோக்கி
அது 'பித்தன் சிரிப்பு'
மனிதா இன்னும் நீ
கரை சேரவில்லையா என்பதுபோல்
இருந்தது...…


அதோ காதில் vilugudhe
அந்த காட்டிலிருந்து
கழுதைப் புலியின் சிரிப்பு…
வயிற்றைக்
குலுக்க…….


எல்லாம் சிரிப்பே அவை தரும்
உணர்வுகள் வேறே


இன்னும் நீ
'கரை சேரவில்லையா ' என்பதுபோல்
இருந்தது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Sep-19, 9:18 pm)
Tanglish : sirippu
பார்வை : 92

மேலே