அவள் ஒரு கேள்விக்குறி - 7

அர்ச்சனவாகிய நானும் சில நாட்கள் இந்தக் கதையை பொருட்படுத்தவில்லை
அவனும் சில நாட்கள் வேளைக்கு வரவில்லை. திமிர் பிடித்தவன் எண்ணெய்ப் பார்க்காமல் ஒதுங்கிவிட்டான் என நானும் நிம்மதி கொண்டேன்
ஆனால் கயவன் ஒரு வாரம் கழித்து பள்ளிக்கு வந்தான்.இவர்களும் ஒரு பள்ளியின் சார்பாக பெண் வைக்கீலை வரவழைத்து இருக்கிறார்கள்.
இதெற்கெல்லாமா வக்கீல் வேண்டும் என நினைத்தேன்.யாரோ விசயத்தை ஊதி பல மடங்கு ஆக்கி விட்டார்கள் என நினைத்தேன்.
அவனைப் பார்க்கும்போது எனக்கு கோபம் அதிகமாகவே வந்தது.
நானும் அவன் மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போனேன்.
அவன் இல்லை இல்லை என்றான்.
நான் எனது மொபைல் சாட்டிங்கை காண்பித்தேன்.
அதையும் அவன் நீ செய்தாய் நானும் செய்தேன் என்றான்.
நான் ஒன்றும் இரட்டை அர்த்தத்தில் செய்யவில்லையே. நண்பன் என்று தானே நானும் நம்பினேன்.
இப்படியே பேச்சு போனது.அவன் ஒரு மன்னிப்பும் கேட்டப்பாடில்லை.உன் குடும்படத்திடம் இதை எல்லாம் சொல்லட்டுமா என்ன வக்கீல் கேட்டாள்.
அவன் நிலை குலைந்து போனான். போன மூன்று பள்ளியிலும் செருப்படி வாங்கித்தான் வெளியே அனுப்பி இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டோம்.
அவன் அமைதியை ஒருத்தி வெறியாக பயன்படுத்திக் கொண்டாள்.
உனக்கு கீழே வேலை பார்த்த எல்லா பெண்களையும் படுக்கைக்கு அழைப்பாய் போல என்றால் கோபமாக
ஏன் முதல் நாளில் உடனே தகுதி இல்லாமல் வேளைக்கு எடுத்தாய் என்றால் ஸ்ருதி
ஏன் என்னைச் சுட்டிக் காட்டி கேவலப்படுத்த நினைக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை.
அப்பொழுது நீ எப்போது வேலையை விட்டுச் செல்கிறாய் எனக் கேட்டாள்.
ஸ்ருதியின் நாசவேலை நிரைவேறிவிட்டது. அர்ச்சனாவும் தன் பங்குக்கு அவனைத்திட்டி தீர்த்து விட்டாள்.
அவன் மௌனம் சாதகம் ஆனது.உடனே தலைமை ஆசிரியரிடம் சொல்லி இவனை அனுப்புங்கள் என்றாள் ஸ்ருதி.
அவனும் வேறு வேலை தேட கொஞ்சம் நாட்கள் கேட்டான். ஆனால் முடியவே முடியாது காமத் கொடுரா உடனே கிளம்பு என்றாள்.
நானும் கிளம்பவா என்றேன். நீ ஏன் கிளம்ப வேண்டும் என்றாள் அவள்.
அன்று முதல் ஸ்ருதியும் நானும்.
அவள் நடத்தை தெரியாமல் ஒரு கூட்டுக்கிளியாக நானும் நட்பானேன்.
ஸ்ருதி என்னைப் பாடகக்கதையாய் பயன்படுத்தி அடுத்த குறி எந்த ஆடவனை எனப் பாருங்கள்.

எழுதியவர் : கவிராஜா (19-Sep-19, 9:29 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 78

மேலே